கஞ்சாவிற்க்கு அடுத்து அதிக அளவு விற்பனையாகும் போதை ஆயில் - 2.2 கிலோ ஹேசிஸ் ஆயில் பறிமுதல் - கோவையை
அதிர வைத்த ரயில்வே துறை - Livecid exclusive - tamilcid
பாட்னாவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் ரயிலில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து ரயில் திருப்பூர் - கோவை இடையே வந்த போது ரயில்வே குற்றப்புலனாய்வு அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.அப்போது எஸ்-10 பெட்டியில் 71 ஆவது இருக்கையின் அடியே மர்ம கவர்கள் இருந்தது தெரியவந்தது.
பிறகு இதையடுத்து 3 பிளாஸ்டிக் கவர்களையும் பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் அதனை சோதனை செய்த போது, அதில் 2.2 கிலோ ஹேசிஸ் ஆயில் என்ற போதைக்கு பயன்படுத்தும் ஆயில் இருந்தது தெரியவந்தது. இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.2.2 கோடி என்று கூறப்படுகிறது.
இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் போதை ஆயிலை கடத்தி வந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சுமார் ரூ. 2.2 கோடி மதிப்புள்ள போதை ஆயில் கைப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே உள்ளது . தற்போது போதை ஆயில் காவல் துறை கவனத்தில் கொள்ள வேண்டிய நிலைமை உருவாகிறது.