திருவண்ணாமலை கிரிவல பாதையில் ரூ. 75000 மதிப்புள்ள கஞ்சா வைத்திருந்த போலி சாமியார் ஆறுமுகம் என்பவரை போலீசார் கைது செய்தனர்
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கஞ்சா புழக்கம் அதிக அளவில் கடந்த ஒரு வருடமாக இருந்து வந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட நிலையில்,
திருவண்ணாமலை கிரிவல பாதையில் சாமியார் ஒருவர் மூலமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் தனிபடை அமைத்து போலீசார் மாறு வேடங்களில் கஞ்சா வாங்குவது போன்று பாவனையில் ஈடுபட்டு வந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்ற போலி சாமியார் சுமார் 75 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவதி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது இதனை தொடர்ந்து போலி சாமியார் ஆறுமுகம் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து வேலூர் மத்திய சிறைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
சிறப்பு செய்தியாளர் :
ஏழுமலை