பள்ளி ஊழியரின் செல்போனில் மாணவியின் ஆபாச படம் - போக்சோவில் கைதான பள்ளி ஊழியர் - திருவேற்காட்டில் - போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம்
திருவேற்காட்டில் மாணவியின் ஆபாச படத்தை செல்போனில் வைத்திருந்த தனியார் பள்ளி ஊழியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சென்னை அடுத்த திருவேற்காடு, மேல் அயனம்பாக்கத்தில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு இதே பகுதியில், கீழ் அயனம்பாக்கம், அண்ணாநகரைச் சேர்ந்த சசிகுமார் என்ற எட்வின் (வயது 21) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் ஒரு மாணவியுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். இதைப் பார்த்த பள்ளி முதல்வர், ஊழியர் சசிகுமாரை அழைத்து விசாரித்தனர்.பின்னர் அவரது செல்போனை பறித்து பார்த்தப் போது மாணவியின் ஆபாச படங்கள் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி முதல்வர், இதுகுறித்து போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சசிகுமார் மீது புகார் அளித்தார்.
புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ரீனா தலைமையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சசிகுமாரை நேற்று கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர் பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1 ல் நீதிபதி ஜெ.ஸ்டாலின் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.கைது செய்யப்பட்ட நபரை 15 நாள் காவலில் அடைக்க நீதிபதி உத்திரவிட்டார்.அதன்படி சசிகுமார் சிறையில் அடைக்கப்பட்டார்.