சேலையூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிக படியான கஞ்சா , கஞ்சா மிட்டாய், கஞ்சா விதை , போதை மாந்திரை, போதை ஊசி , போதை காளான் என அனைத்தும் திறன் பட செயல்படுகிறது . காவல் துறை இருப்பு கரம் துருபிடிக்காமல் அடக்குமா ??
தாம்பரம் அடுத்து ராஜகீழ்ப்பாக்கம், சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி (59). இவர், மாடம்பாக்கம் பகுதியில் ஒட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஜெயமணி மற்றும் அவரது மகன் மணிகண்டன் (29), ஊழியர் நேமராஜ் (29) ஆகியோர் ஓட்டலில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் குடிபோதையில் வந்த 2 பேர், 4 சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கிக்கொண்டு பணம் வந்து தருவதாக கூறியுள்ளனர். அதற்கு, ஜெயமணி பணத்தை கொடுத்து விட்டு பார்சலை எடுத்துச் செல்லுங்கள் எனக் கூறியுள்ளார். இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், அங்கிருந்து சென்ற அந்த 2 பேரும் அவர்களது நண்பர்களை அழைத்து வந்து, மீண்டும் தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் ஒரு கட்டத்தில் அங்கு கடாயில் இருந்த சூடான எண்ணெய் எடுத்து ஜெயமணி மற்றும் அவரது மகன் மணிகண்டன் மீது ஊற்றி ஒட்டலில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர். அங்கு பிரச்சனை செய்த அனைவரும் கஞ்சா போதையில் இருந்துள்ளனர். அந்த கஞ்சா கும்மல் கடையின் முன் ஒரு கொலை வெறி மிருகதனத்துடன் செயல்பட்டனார்.
மேலும், இச்சம்பவம் குறித்து காவல் கட்டுப்பாட்டறைக்கு, ஜெயமணி தரப்பினர் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், சேலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து, தகராறில் ஈடுபட்ட 5 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் வந்து விசாரணை நடத்தியதில், அவர்கள் மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த அஜித் (27), கார்த்திக் (எ) ஹரிஹரன் (35), விக்கி (எ) விக்னேஷ் (24), பிரவீன் (எ) ஜாக்கோ (20), சிவா (28) என தெரியவந்தது. மேலும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சேலையூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிக படியான கஞ்சா , கஞ்சா மிட்டாய், கஞ்சா விதை , போதை மாந்திரை, போதை ஊசி , போதை காளான் என அனைத்தும் திறன் பட செயல்படுகிறது . காவல் துறை இருப்பு கரம் துருபிடிக்காமல் அடக்குமா ??
தமிழக அரசு போதை பொருளை அறவே ஒழிக்க வேண்டும் எனெ பொதுமக்களின் மிக முக்கியமானே கோரிக்கை விடுத்துள்ளனர்...
#சேலையூர் #மாடம்பாக்கம் #லைவ்சிஐடி #குற்றம் #livecid #livecidtamil #cidtamil #cidzee #police