திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றித் திரியும் நாய்களால் பொதுமக்கள் அவதி - நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம் - Livecidtamil

User2
0
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றித் திரியும் நாய்களால் பொதுமக்கள் அவதி. ஊழியர்கள் அலட்சியமாக கொட்டும் சாப்பாட்டை நாய்கள் கொண்டு வந்து அலுவலக வாயிலில் சாப்பிடுவதால் பொதுமக்கள் அலுவலகத்திற்குள் நுழைய அச்சம் தெரிவிக்கின்றனர்.


திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பல்வேறு துறைகள் சார்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அலுவலகத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளுக்காக வந்து செல்கின்றனர். அதே நேரத்தில் திங்கள் கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளுக்கு மனுவை வழங்க வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்களின் அலட்சியத்தால் அவர்கள் கடைகளில் இருந்து வாங்கி வரும் உணவு பொட்டலங்கள் மற்றும் வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவுகளை வீணாக அலுவலக வளாகம் அருகிலேயே கொட்டி விடுவதால் அதனை சாலைகளில் சுற்றி தெரியும் நாய்கள் அந்த பொட்டலங்களை அலுவலக வாயிலில் கொண்டு வந்து வைத்து சாப்பிடுகின்றன. இதனால்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கோரிக்கைகளுக்காக வரும் பொது மக்கள் மிகுந்த சிரமத்துடனும் அச்சத்துடனும் உள்ளே சென்று வரக்கூடிய நிலை உருவாகியுள்ளது. எனவே  வீணாகும் உணவு பொட்டலங்களை குப்பை தொட்டியில் கொட்டி அதனை முறையாக அகற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சுற்றிதிரியும் நாய்களை முறையாக பிடித்து வேறு இடத்தில் விடுமா மாவட்ட நிர்வாகம் ?

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !