குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் வேப்பம்பட்டு பகுதியில் உள்ள மதுபான கடை அருகே கள்ளத்தனமாக மதுபானம் விற்கும் நபரிடம் சீருடை அணிந்தும், அணியாமலும் இருசக்கர வாகனத்தில் வரும் நான்கு காவலர்கள் மாமுல் வாங்கிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்கள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இதன் அருகிலேயே டாஸ்மாக் பார்-ம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 26-01-2023 குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபான கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் வேப்பம்பட்டு பகுதியில் உள்ள அரசு மதுபான கடை அருகே கள்ளத்தனமாக மதுபானங்களை விற்று வருகிறார்.
வீடியோ வெளியிடு
இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் சீருடையில் வரும் சட்டம் ஒழுங்கு மற்றும் சீருடை இல்லாத குற்றப்பிரிவு காவல்துறையினரும் மதுபானம் விற்கும் நபரிடம் நின்று பேசிவிட்டு மாமுல் வாங்கிச் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
குடியரசு தின நாளில் அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் கள்ளத்தனமாக மதுவிற்கும் நபர்களிடம் காவல்துறையினர் மாமுல் வசூலிக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளத்தனத்தை கண்டிக்க வேண்டிய காவலர்களே கள்ளத்தனமாக மாமூல் வசூலிப்பது கவால் துறைக்கும் அரசுக்கும் அவப்பெயர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.