30 ஆண்டுகளாக சீக்ரெட்டாக படம் பிடித்த கும்பல்...!பத்தாயிரம் பெண்களின் குளியல் படம் - The Gang Filmed Secretly For 30 Years....Ten Thousand Women's Bath Film - Livecid - Treanding tamil - newstamil

Admin
0


ஜப்பான் நாட்டு பொதுமக்களையும் தாண்டி இந்த வெந்நீர் நீரூற்றுகளுக்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தினசரி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். டோக்கியோ பூகோளத்தில் வடக்கு பக்கத்தில் அமைந்துள்ள ஜப்பான் நாடு அதிக குளிர்ச்சியாக நாடுகளில் ஒன்றாகும். 12.5 கோடி மக்கள் தொகை கொண்ட ஜப்பானின் சராசரி ஆண்டு வெப்பம் 10.82 என்ற அளவிலேயே இருந்துவருகிறது.



இதனால் அங்கு பொதுமக்கள் அதிகமாக வெந்நீர் பயன்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மேலும் அரசு சார்பில் அங்கு முக்கிய இடங்களில் ஹாட் ஸ்பிரிங்ஸ் எனப்படும் வெந்நீர் நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. நிலத்தடியே இருக்கும் எரிமலை செயல்பாட்டால் இந்த வெந்நீரூற்றுகள் உருவாகிறது. ஜப்பான் நாட்டு பொதுமக்களையும் தாண்டி இந்த வெந்நீர் நீரூற்றுகளுக்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தினசரி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக இந்த வெந்நீர் நீரூற்றுகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், வெந்நீர் ஊற்றுகளில் குளிக்கும் பெண்களை சிலர் ரகசியமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.



அதன்படி போலீசா நடத்திய சோதனையில், பெண்கள் குளிக்கும் காட்சிகளை புகைப்படம் எடுத்தது தொடர்பாக டாக்டர் ஒருவர் உட்பட 17 பேரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் கைப்பற்றப்பட்ட பொருள்களை சோதனையிட்டதில் 10,000 பேரின் ஆபாசமான புகைப்படங்கள், மற்றும் வீடியோக்கள் இருந்தது கண்டறியபட்டது.கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் மூத்த நிறுவன நிர்வாகிகள், உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் மற்றும் டோக்கியோ டாக்டர் ஆகியோர் அடங்குவர். 50 வயதான டாக்டர் கரின் சைட்டோ, தனது 20 வயதிலிருந்தே பெண்கள் வெந்நீர் ஊற்றுகளில் குளிப்பதை சீக்ரெட்டாக படம் பிடித்து வருகிறார்.கைது செய்யப்பட்ட மற்ற குற்றவாளிகள் சைட்டோவிடமிருந்து தான் பெண்களைப் படம்பிடிக்கும் கீழ்த்தரமான நுட்பங்களைக் கற்றுள்ளனர். மேலும், நாடு முழுவதும் உள்ள 100க்கும் மேற்பட்ட வெந்நீர் ஊற்றுகளில் குளித்த பெண்களில் புகைப்படங்கள் அவர்களிடம் இருப்பதாகவும் அதை பல்வேறு இணையதளங்களுக்கு விற்பனை செய்த தகவலும் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் வேறு யாரும் சம்மந்தப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.





கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !