திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் பகுதியில் கலால் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 1,500 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை கைப்பற்றி அழித்தனர்.
திருவண்ணாமலை கலால் டிஎஸ்பி ரமேஷ்ராஜிற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போளூர் கலால் இன்ஸ்பெக்டர் கே.புனிதா தலைமையிலான ஜமுனாமரத்துர் அடுத்த நெல்வாசல் கிராமம் கிழக்கு ஓடை அருகே உள்ள என்ற இடத்தில் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தி வந்தனர்.
அப்போது புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 பேரல்களில் இருந்த 1,500 லிட்டர் கள்ளச்சாராய ஊறல், மற்றும் 60 லிட்டர் கள்ளச்சாராயம், அங்கிருந்த சாராய அடுப்புகள், பாத்திரங்கள், வெல்லம் உள்ளிட்ட மூலப்பொருட்கள் ஆகியவற்றை கைப்பற்றி அழித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இடத்தில் சாராயம் காய்ச்சும் கும்பல் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதுபோல் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்கள் கண்டுபிடித்து கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
Chief reporter : elumalai