"கடவுளே, எங்களை கோழிக்கால் சாப்பிடும் நிலைக்கு தள்ளி விடாதே" என்று கீஸா சந்தையில் கோழிக் கடைக்காரரிடம் ஒரு நபர் கெஞ்சுகிறார்.
எகிப்து கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. அங்குள்ள மக்கள் தமது குடும்பங்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கக்கூட கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கில், நாய், பூனைகளுக்கு உணவாகத் தூக்கி எறியப்படும் கோழிக்கால்களில் புரதச் சத்து அதிகம் உள்ளதால் அவற்றை சமைத்து உண்ண வேண்டும் என சமீபத்தில் அந்நாட்டு அரசு மக்களுக்கு அறிவுரை வழங்கியது.
இந்த ஆலோசனையால் அந்நாட்டு மக்களிடம் இருந்து அரசுக்கு எதிராக கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
உச்சம் தொடும் பணவீக்கம்`
மாட்டுக் கறி விலை அதிகமாக இருப்பதால், பலரால் வாங்க முடியாத நிலையில் கோழிக் காலை சாப்பிட எகிப்து அரசு பரிந்துரை வழங்கியிருக்கிறது
மார்ச் மாதம் 30% அதிகமாக பணவீக்க உயர்வால் பல நாடுகள் தத்தளித்து வருகின்றன.
அப்படி பணவீக்கம் அதிகரிப்பதால் தத்தளிக்கும் நாடுகளில் நாடுகளில் எகிப்தும் ஒன்று.
பலருக்கும் அத்தியாவசியத் தேவைகளான சமையல் எண்ணெய், சீஸ் ஆகியவை விலையேற்றத்தால் ஆடம்பர பொருட்களாகி விட்டன. சில பொருட்களின் விலை குறுகிய நாட்களுக்குள் இரண்டு மடங்காக, மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
“மாதம் ஒரு முறை நான் மாட்டுக்கறி சாப்பிடுவேன், சில சமயம் அதுவும் வாங்க மாட்டேன். ஆனால் நான் வாரத்திற்கு ஒரு முறையாவது சிக்கன் சாப்பிடுவேன், ”என்று மூன்று குழந்தைகளின் தாயான வேதாத் கூறினார்.
ஆனால், சமீபகாலமாக முட்டையின் விலை அதிகமாகி ஒரு முட்டை 0.16 டாலருக்கு (இந்திய மதிப்பில் 13 ரூபாய்) விற்பனையாகிறது என்று அவர் கூறினார்.
எகிப்து நாடு உணவு தேவையில் இறக்குமதியை பெரிதும் சார்ந்துள்ளதால் இந்த விலையேற்றம் நடக்கிறது.
1 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை உள்ள எகிப்து, உள்நாட்டில் வளரும் உணவை விட அண்டை நாடுகளில் இருந்து உணவை அதிகமாக இறக்குமதி செய்கிறது.
தங்கள் நாட்டில் உள்ள கோழிகளுக்கு வழங்கப்படும் தீவனம் உட்பட பல பொருட்கள் பிற நாடுகளில் இருந்து வாங்கப்படுகிறது.
கடந்த 12 மாதங்களில் டாலருக்கு நிகரான எகிப்திய பவுண்ட் அதன் மதிப்பில் பாதிக்கும் மேல் இழந்ததுள்ளது.
ஜனவரியில் எகிப்து அரசு அதன் நாணய மதிப்பை மீண்டும் ஒருமுறை மதிப்பிழக்கச் செய்ததால், தானியங்கள் உள்ளிட்ட உணவு பொருட்களின் இறக்குமதி செலவுகள் கடுமையாக உயர்ந்தன.