கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.
அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம் சேர்ந்த ராஜா, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மோகனமூர்த்தி ஆகியோர் கடந்த 14.03.2023 அன்று அரியலூர் உழவர் சந்தை அருகே சென்ற போது சாலையில் கிடந்த 45 ஆயிரம் ரூபாய் பணம், செல்போன், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் இதர ஆவணங்கள் உள்ளிட்டவை அடங்கிய கைப்பையை கண்டெடுத்தனர். உடனடியாக அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரில் வந்து விவரம் தெரிவித்து கைப்பையை அதன் உரிமையாளர் வசம் ஒப்படைக்க உதவினார்
இதனை அடுத்து அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கா.பெரோஸ் கான் அப்துல்லா ராஜா அவர்கள் மற்றும் மோகனமூர்த்தி அவர்களின் நற்செயலினை பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
இந்நிகழ்வின் போது அரியலூர் மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. மணவாளன் மற்றும் அரியலூர் மாவட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. ஆனந்தன் உடன் இருந்தனர்.