செய்யாறு அருகே காவல்துறையினர் நடத்திய சாராய வேட்டையில் 9 லிட்டர் எரி சாராயம், 110 லிட்டர் நாட்டு சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. அது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை கண்காணிப்பாளர் ரமேஷ் ராஜ் மேற்பார்வையில், செய்யாறு மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் கலையரசி தலைமையில் வெம்பாக்கம் பகுதியில் போலீசார் திடீர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
வெம்பாக்கம் வட்டம், அரசாணிப் பாளையம் அடுத்த சித்தாலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் மகன் மணிகண்டன் என்பவரிடமிருந்து எரி சாராயம் 9 லிட்டர், நாட்டு சாராயம் 110 லிட்டர், அரசு மது பாட்டில்கள் 23, உள்ளிட்டவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அவற்றை பயன்படுத்த இருந்த இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் சாராயம் பதுக்கிய மணிகண்டனை காவல்துறையிளர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Special Reporter: Ezumalai