தென்னக நுகர்வோர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் திருச்சி பிஷப் ஹீபர் தன்னாட்சி கல்லூரி நுகர்வோர் மன்றம் இணைந்து கல்லூரி வளாகத்தில் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவை நடத்தியது.
தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் முனைவர் மனித விடியல் மோகன் தலைமை வகித்தார். திருச்சி தஞ்சை திருமண்டல பேராயர் சந்திரசேகரன், திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் காந்தி, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை துணை தலைவர் ஜெயபாரதி, பிஷப் ஹீபர் தன்னாட்சிக் கல்லூரி முதல்வர் பால் தயாபரன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள்.
உணவு பாதுகாப்பு துறை திருச்சி மாவட்ட அலுவலர் ரமேஷ் பாபு, திருச்சி மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் வெங்கடேசன், BIS தர நிர்ணய விஞ்ஞானி ரமேஷ், கல்லூரி விரிவாக்க புலப்பணிகள் முதன்மையர் ஆனந்த் கிதியோன், திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர்கள் செந்தில்குமார், சாயீஸ்வரி உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினார்கள்.
மாநிலத் துணைத் தலைவர் முனைவர் கே கே கார்த்திக் வரவேற்புரை நிகழ்தினார் மாவட்ட நூலக வாசகர் வட்ட தலைவர் கோவிந்தசாமி வாழ்த்துரை வழங்கினார். உயர்மட்டகுழு செயலாளர் ஜெயராமன் தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பால் குணா லோகநாதன் தென்னக நுகர்வோர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில துணை செயலர் குமார் மாவட்ட தலைவர் முஹம்மது சபி,மண்டல செயலர் பிளட் சாம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரசன்ன வெங்கடேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் சமூக பணி சேவை செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது முடிவில் பிஷப்ஹீபர் கல்லூரிகன்ஸாயூமர் கிளப் ஒருங்கிணைப்பாளர்மனிகண்டன் நன்றி கூறினார்