கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுபடி 2021 -ஆம் ஆண்டு கஞ்சா வேட்டை 1.0 துவங்கப்பட்டது . இதன் தொடர்ச்சியாக கஞ்சா வேட்டை 2.0 மற்றும் கஞ்சா வேட்டை 3.0 ஆகியவை கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வந்த நிலையில் 30.04.2023 இரவு முதல் "ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0" அதிரடி நடவடிக்கை நடைபெற்று வருகிறது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் கஞ்சா பதுக்கி வைப்பவர்கள், விற்பவர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் 044-28447701 என்ற தொலைபேசி எண்ணிலும், tndgpcontrolroom@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த ரகசியம் காக்கப்படுவதுடன், தக்க வெகுமதியும் வழங்கப்படும் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
https://play.google.com/store/apps/details?id=com.amtexsystems.kaavaluthavi
#OperationGanja4.0 #Drugfreetamilnadu #Ganja #Unakkumvendam #enakkumvendam #DGPSylendrababuIPS #TNPolice #TamilNaduPolice