சிறுகனூரை அடுத்த எம்.ஆர்.பாளையம் சாய்பாபா கோவில் அருகே வசித்து வந்தவர் சண்முகசுந்தரம்(வயது 60). இவர் தமிழ்நாடு விவசாயிகள் இயக்க மாநில செயலாளராக இருந்து வந்தார்.
இவருடைய முதல் மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு நித்தியானந்தன்(30) என்ற மகன் உள்ளார். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பரமேஸ்வரி இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து வங்காரத்தை சேர்ந்த வளர்மதியை(45) 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சண்முகசுந்தரத்திற்கும், வளர்மதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், அவர் வங்காரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் சண்முகசுந்தரம் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் 29.04.2023 அதிகாலை சண்முகசுந்தரம் வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சிறுகனூர் உதவி ஆய்வாளர் நித்தின் வழக்கு ( 137/2023 U/S 302 IPC)பதிவு செய்து விசாரணை துரிதப்படுத்தப்பட்டது.
மேலும் இந்த வழக்கில் கொலையாளிகளை பிடிப்பதற்காக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின்படி கூடுதல் சூப்பிரண்டு கோபாலச்சந்தர் மேற்பார்வையில், லால்குடி துணை சூப்பிரண்டு அஜய்தங்கம் தலைமையில் சிறுகனூர் இன்ஸ்பெக்டர் சுமதி, சமயபுரம் இன்ஸ்பெக்டர் கருணாகரன், லால்குடி இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
மேற்படி குற்றவாளிகளை வலை வீசி தேடி வந்த நிலையில் 02.05.2023 ம் தேதி மாவட்ட இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் இளம் பிழையாளி சரணடைந்தார். மேலும் தேடுதல் வேட்டை முடுக்கப்பட்டதில்03.05.2023 ம் தேதி சணமங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்தில் மேற்படி வழக்கின் எதிரிகள் 1. அறிவழகன் த.பெ ஆறுமுகம் 2 பால்ராஜ் த.பெ ஆறுமுகம் 3. கார்த்திகேயன் த.பெ ராஜ் 4. சண்முகவேல் த.பெ கருணாகரன் 5. இளவரசன் த.பெ ரவி ஆகியோர் சணமங்கலம் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் மூலம் சிறுகனூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட எதிரிகளிடம் வழக்கின் உண்மை தன்மையை விசாரித்ததில் மேற்படி
அறிவழகன் ,பால்ராஜ், கார்த்திகேயன், எதிரிகளுக்கும் சண்முகசுந்தரத்திற்கும் பல வருடங்களாக அரசு நிலம் சம்மந்தமாக பிரச்சனை இருந்து வந்த நிலையில் ,
முன் விரோதம் காரணமாக மேற்படி சண்முகவேல், இளவரசன் மற்றும் இளம்பிழையாளி யை கொண்டு கூட்டு சதி செய்து திட்டமிட்டு சண்முகசுந்தரத்தை கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வருகிறது.
மேற்படி குற்றவாளிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாள், பிச்சுவாகத்தி குற்றவாளிகள் பயன்படுத்திய இரண்டு சக்கர வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
சிறுகனூர் காவல் நிலைய குற்ற எண்.137/2023 U/S 302 IPC
#indianews #news #india #covid #newsindia #dailynews #delhi #newsupdate #aajtak #bjp #breakingnews #latestnews #hindinews #narendramodi #zeenews #indianewsupdates #indian #instagram #coronavirus #politics #indiannews #ndtv #currentaffairs #punjabkesari #dainikbhaskar #haryana #follow #lockdown #trendingnews #abpnews
#modi #businessnews #corona #bhfyp #mumbai #indianarmy #sonipatnews #indianpolitics #bahadurgarhnews #jindnews #rahulgandhi #faridabadnews #congress #jhajjarnews #gohananews #worldnews #madhyapradesh #charkhidadrinews #gurugramnews #punjabkesariharyana #instagood #hindi #headlines #like #newspaper #newsupdates #karnalnews #indiaupdates #hisarnews #tamilnadu
www.livecid.in Editor/Publisher :Mr.Buddha Prakash