8 கிலோ தங்கம் கடத்திய இருவர் கைது - இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு கூலிக்கு வேலை - மன்னார் வளைகுடா - www.livecid.com - www.livecid.in

User2
0
8 கிலோ தங்கம் கடத்திய இருவர் கைது - இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு கூலிக்கு வேலை - மன்னார் வளைகுடா





ராமேசுவரம்: மன்னார் வளைகுடா புத்தளம் கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் பிற்பகல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும்படியாக கடலில் நின்றுகொண்டிருந்த ஒரு மீன்பிடி பைபர் படகில் சோதனையிட்டனர்.

அப்போது, இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு தங்கம் கடத்திச் செல்வது தெரியவந்தது.
(ads)
இதையடுத்து, படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 பைகளில் 8.450 கிலோ கிராம் தங்கக் கட்டிகள் மற்றும் சங்கிலிகளை பறிமுதல் செய்து, அந்த படகில் வந்த 2 பேரையும் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூ.5 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும், கூலிக்கு தமிழகத்துக்கு தங்கம் கடத்தியதாகவும் தெரியவந்துள்ளது.
(ads)

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !