கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, உடல்நலக்குறைவால் பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 80.
கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி. கோட்டயம் மாவட்டம், புதுப்பள்ளியில் இருந்து, 1970ல் சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்ட உம்மன் சாண்டி, பின்னர் தோல்வியை சந்தித்ததே இல்லை. கட்சித்தலைவர்கள் இந்திராவும், ராகுலும் தேர்தல் அரசியலில் தோற்று போன போதும், காங்கிரஸ் கட்சியில், 50 ஆண்டுகள் தோல்வியே சந்திக்காமல், ஒரே தொகுதியில் இருந்து, தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டவர் இவர் ஒருவரே
50 ஆண்டுகால சட்டசபை வாசத்தில, நான்கு முறை மாநில அமைச்சராக, 2006 - 2011ல் ஒரு முறை எதிர்க்கட்சித்தலைவராக, 2004 - 2006 மற்றும் 2011 - 2016ல் இரண்டு முறை முதல்வராக பணியாற்றியுள்ளார். சில மாதங்களுக்கு முன், உம்மன் சாண்டிக்கு தொண்டை புற்றுநோய் ஏற்பட்டது. இதற்காக ஜெர்மனிக்கு சென்று சிகிச்சை பெற்றார். அதன்பின் பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்றார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக, பெங்களூருவில் உம்மன் சாண்டி காலமானார்.
#oommenchandy #kerala #congress #youthcongress #rameshchennithala #ksu #muslimleague #udf #rahulgandhi #malappuram #pinarayivijayan #kochi #kannur #cpimkerala #shafiparambil #kozhikode #cpim #kottayam #ldfkerala #inc #iuml #sfi #sahib #ldf #dyfikerala #keralapolitics #dyfi #together #kanamrajendran #cpi#saghav #politics #keralagodsowncountry #mallutiktok #msf #wayanad #entekeralam #ksudhakaran #ernakulam #thrissur #palakkad #mallustatus #entekottayam #vdsatheeshan #malayalam #youthcare #youthleague #ksukerala #inckerala #alappuzha #mallu #malluthugs #malayali #idukki #wayanadan #malabar#comrade #lalsalam #voteforldf #sakhavu#pinarayivijayan#kochi#kannur#cpimkerala#shafiparambil#kozhikode#cpim#kottayam#ldfkerala#inc#iuml#sfi#sahib#ldf#dyfikerala#keralapolitics#dyfi#together#kanamrajendran#cpi