சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி கடைக்கு சென்ற போது வழி மறைத்து பாலியல் சீண்டல் செய்த பாண்டியனை அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்
வடசென்னை புதுகாமராஜர் நகர் 4வது தெருவில் வசித்துவரும் சிறுமியின் பெற்றோர் அருகில் உள்ள பெட்டி கடைக்குச் சென்று சில பொருட்களை வாங்கி வரும்படி சிறுமியை அனுப்பி வைத்துள்ளனர்.
அப்போது அங்கிருந்த பாண்டியன் என்ற 65 வயது முதியவர் சிறுமியை வழிமறித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிறுமி அழுது கொண்டு தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். சிறுமி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காசிமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே புகாரை பெற்று கொண்ட காவல் துறையினர் தலைமறைவாக இருந்த முதியவர் பாண்டியனை எண்ணூரில் கைது செய்து இராயபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அதன் பின்னர் பாண்டியன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 6 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த 65 வயது முதியவர் பாலியல் தொல்லை அளித்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.