மனநல பாதித்த பெண்ணை அரசு மருத்துவமனையிலேயே கற்பழித்த 108 ஆம்புலன்ஸ் உதவியாளர் கைது - ராமநாதபுரம் - Livecid-Crime

User2
0

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும், அவரது தாயும் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். 


அப்போது அங்கு பணியில் இருந்த செவிலியர் வேறு ஒரு நோயாளியை கவனிக்க சென்றதால் காத்திருக்குமாறு கூறியுள்ளார். அந்த நேரத்தில் எனக்கு தெரிந்த மருத்துவரிடம் அழைத்து செல்வதாக கூறிவிட்டு இளம்பெண்ணின் தாயை அங்கயே இருக்க சொல்லிவிட்டு அந்த பெண்ணை மட்டும் தனியாக அழைத்து சென்றுள்ளார். பின்னர் மருத்துவமனையில் உள்ள கழிவறைக்கு அழைத்து சென்று இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது தாயிடம் நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து மருத்துவமனை தரப்பில் இருந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பாலமுருகன் கைது செய்யப்பட்டார். இதனிடையே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் 108 ஆம்புலன்ஸ்' உதவியாளர் பாலமுருகன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்

English Version 

A mentally challenged woman from a village near Thiruvadan in Ramanathapuram district suddenly fell ill.  After this, the mentally challenged young woman and her mother were taken to Ramanathapuram Medical College Hospital by 108 ambulance.


 The nurse who was on duty at that time told her to wait as she went to attend to another patient.  At that time, he said that he would take the young woman's mother to a doctor he knew and then took the girl alone.  Then he took the girl to the hospital's toilet and raped her.


 The victim told her mother about the incident and cried.  After this, the hospital informed the police.  Balamurugan was arrested in connection with this incident.  Meanwhile, 108 Ambulance assistant Balamurugan has been dismissed for raping a mentally challenged woman.

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !