கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது - ரூபாய் 35,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனம் மீட்பு
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி செக்கடி தெருவை சேர்ந்த ரத்தினசாமி மகன் மாரியப்பன் (37) என்பவர் கடந்த 02.09.2023 அன்று அவரது வீட்டின் முன்பு அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்துள்ளார். பின்னர் அந்த இருசக்கர வாகனம் திருடுபோயுள்ளது.
இதுகுறித்து மாரியப்பன் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் விஜய் (25) என்பவர் மேற்படி மாரியப்பனின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. காயத்ரி மற்றும் போலீசார் எதிரி விஜய்யை கைது செய்து அவரிடமிருந்த திருடப்பட்ட ரூபாய் 35,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.