திருமணமான 4 மாதத்தில் பட்டதாரி இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை: வழக்கு பதிவு செய்து செவ்வாய்பேட்டை போலீசார் விசாரணை
திருவள்ளூர் அடுத்த திருவூர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் மகன் கார்த்திக்(25) என்பவருக்கும் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த திருமலை என்பவரது மகள் ஜீவிதா(21) என்ற பெண்ணிற்கும் கடந்த மே மாதம் 25ஆம் தேதி திருமணம் நடைபெற்றது
இந்த நிலையில் ஜீவிதாவும் கார்த்திக்கும் திருவூர் பகுதியில் உள்ள கார்த்திக்கின் வீட்டில் வசித்து வந்த நிலையில் கார்த்திக் மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்
வழக்கம்போல் நேற்று கார்த்திக் மதுரவாயல் பகுதியில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்ய சென்ற நிலையில் வீட்டிலிருந்த ஜீவிதா மதியம் 1 மணி அளவில் கணவன் கார்த்திக்கு தொலைபேசி மூலம் அழைத்து தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும் உடனடியாக வீட்டுக்கு வரும்படியும் அழைத்துள்ளார், இதனை அடுத்து கார்த்திக் கம்பெனியில் பர்மிஷன் கேட்டு வருகிறேன் உடம்பு சரியில்லாததற்கு மாத்திரை போட்டு தூங்குமாறு கூறியதை அடுத்து
சரி என தெரிவித்த ஜீவிதா வீட்டில் யாரும் இல்லை எனவே வீட்டிற்கு வெளியே சாவியை வைத்து விடுகிறேன்
நான் தூங்கிவிட்டால் நீ வந்து எடுத்து திறந்து கொள் என கார்த்திக்கிடம் கூறியதாக தெரிகிறது
பின்னர் கார்த்திக் மாலை4.30 மணி அளவில் வீட்டிற்கு வந்து திறந்து பார்த்தபோது ஜீவிதா படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அதிர்ச்சி அடைந்து உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் விரைந்து வந்த செவ்வாய்பேட்டை காவல் துறையினர் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு l உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
திருமணமான நான்கே மாதத்தில் பட்டதாரி இளம் பெண் வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் திருவள்ளூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Special Reporter: Ezumalai