திருவள்ளூரில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சக காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் காவலர் ரோஜா தனது கணவர் ராஜ்குமார் இரண்டு குழந்தைகளுடன் திருவள்ளூரில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
அவர் கணவர் ராஜ்குமார் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள குற்றப் பிரிவில் போலீசாராக பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு ஆண் பெண் என இரண்டு குழந்தைகள் இருந்து வருகின்றன அவர்கள் அப்பகுதிகள் உள்ள பள்ளியில் படித்து வருகின்றன
விடுமுறை தினம் என்பதால் குழந்தைகளை ரோஜா தனது சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு தனது தாயாரை வீட்டுக்கு வரவைத்து குழந்தைகளை அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு மனைவியை கணவர் தாக்கியதாக கூறப்படுகிறது.
மன உளைச்சலில் இருந்து வந்த மனைவி ரோஜா வீட்டின் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வீட்டுக்கு வந்து பார்த்த கணவன் வீட்டின்
படுக்கை அறை கதவு பூட்டப்பட்டு இருப்பதை கண்ட கணவர் நீண்ட நேரம் கதவை தட்டி திறக்காததை கண்ட அவர்.
கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் ரோஜா மின்விசிறியில் தூக்கிட்டு கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கத்தியுள்ளார்.
இதனால் குடியிருப்பில் தங்கி உள்ள சக காவலர்கள் வந்து தூக்கில் தொங்கி இருந்த அவர் உடலை கீழே இறக்கி ஆம்புலன்ஸ் வர வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணையானது மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே மனைவி மீது கணவன் சந்தேகம்
ஏற்பட்டு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா
அல்லது குழந்தைகளை தாயுடன் திருவண்ணாமலைக்கு அனுப்பி வைத்ததால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மன உளைச்சலில் மனைவி தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இரண்டு பிள்ளைகளுக்கு தாயான பெண் போலீசார் திருவள்ளூரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சக காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Reporter:Ezumalai
www.livecid.in Crime News Gallery
Tamil Crime News Portal
www.livecid.com - India Trending News - India Crime News Portal - A company that tells the truth as it is.