மாணவி தற்கொலை செய்து 4 நாட்கள் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வினோத் என்பவர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தயக்கம் காட்டி வருகின்றனர் என உறவினர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்தவர் ஸ்ரீநிதி. 21 வயதான இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்திருக்கிறார். கல்லூரி விடுமுறை காரணமாக சொந்த ஊரான கோத்தகிரிக்கு வந்திருக்கிறார். ஸ்ரீநிதியின் பெற்றோர் வழக்கம் போல் கடந்த 2 - ம் தேதி காலை வேலைக்குச் சென்றுள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார் அவர்.
இதை அறிந்த கோத்தகிரியைச் சேர்ந்த சிலர் ஸ்ரீநிதி வீட்டின் கதவை உடைத்து காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால், ஸ்ரீநிதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், ஸ்ரீநிதியின் உடலை மீட்டு கூறாய்வுக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், ஸ்ரீநிதி கடைசியாக எழுதிய கடிதத்தையும் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் ' வினோத்த எனக்கு பிடிக்கலை. பிளாக்மெயில் பண்ணினாலதான் அவன பார்க்க போனேன். ரொம்ப பிளாக் மெயில் பன்றான். ரொம்ப அசிங்கமா பேசுறான். என்ன நிம்மதியா இருக்க விட மாட்டேங்கிறான் அம்மா .
வினோத் என்ற இளைஞரால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலை எழுதியிருக்கிறார். இந்த கடிதம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஸ்ரீநிதியின் தற்கொலைக்கு காரணமான வினோத் என்ற இளைஞர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தயக்கம் காடுவதாகக் கூறி மாணவியின் உறவினர்கள் கோத்தகிரி காவல்நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
இது குறித்து தெரிவித்த ஸ்ரீநிதி உறவினர்கள், " ஸ்ரீநிதியை காதலிப்பதாகச் சொல்லி வினோத் என்ற இளைஞர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறார். தாங்க முடியாமல் வேறுவழியின்றி தற்கொலை செய்திருக்கிறார். சம்பவத்தன்று காலை ஸ்ரீநிதி வீட்டிற்கு அந்த இளைஞர் இரண்டு மூன்று முறை வந்து சென்றிருக்கிறார். மாணவி தற்கொலை செய்து 4 நாட்கள் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வினோத் ஆளுங்கட்சி தரப்பை சேர்ந்தவர் என்பதால் நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தயக்கம் காட்டி வருகின்றனர் என்று சந்தேகிக்கிறோம். ஸ்ரீநிதியின் தற்கொலைக்கு காரணமான இளைஞர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றனர்.
முற்றுகையிட்ட உறவினர்கள்
இது குறித்து தெரிவித்த காவல்துறையினர், "மாணவி தற்கொலை குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு வருகிறோம். கைப்பற்றப்பட்ட கடிதும் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். தற்கொலைக்கு தூண்டிய இளைஞர் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதில் அரசியல் அழுத்தம் எதுவுமில்லை" என தெரிவித்துள்ளனர்.
www.livecid.in Crime News Gallery
Tamil Crime News Portal
www.livecid.com - India Trending News - India Crime News Portal - A company that tells the truth as it is.