திருவள்ளூர் அருகே வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த இருவரை போலீசார் மடக்கி பிடித்து அவர்களிடமிருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அடுத்த புதுச்சத்திரம் பகுதியில் வெள்ளவேடு போலீசார் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது
இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீசார் நிறுத்த முயன்ற போது அவர்கள் நிற்காமல் சென்றுள்ளனர்.
போலீசார் அவர்களை பின் தொடர்ந்து துரத்தி பிடித்தது அவர்களை சோதனை செய்தபோது அவர்கள் சட்டவிரோதமாக 7 கிலோ கஞ்சாவை கடத்தியது தெரியவந்தது.
இதை தொடர்ந்து இருவரை கைது செய்து வெள்ளவேடு காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர் .
விசாரணையில் பாப்பா சதீஷ் (24) பரத் (18) என்பது தெரியவந்தது.
மேலும் கஞ்சா சப்ளை செய்த பொன்னேரி சோழவரம் பகுதி சேர்ந்த அவருடைய நண்பர்களான மகேந்திரன்( 40) சந்தோஷ்குமர் (24) யாம் ராஜ் ( 25) ரோகித் (23) உமேஷ் (25) 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மற்றும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியும் அவர்கள் கூறிய வாக்குமூலங்களை பெற்ற பின்பு அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் : ஏழுமலை
www.livecid.in Crime News Gallery
Tamil Crime News Portal
www.livecid.com - India Trending News - India Crime News Portal - A company that tells the truth as it is.