திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த பென்னாலூர் பேட்டை மேட்டுகாலனி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (43). இவரது மனைவி நந்தினி(29). இந்நிலையில் கடந்த 3ம் தேதி வள்ளுவர்நகர் மேல்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சீனிவாசன் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவ்வழியே சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்த பென்னலூர் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பெயரில் ,உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் மனைவியிடம் போலீசார் கிடுக்குப்பிடியான தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவியே கணவனை கொலை செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக நந்தினி போலீசில் அளித்த வாக்குமூலத்தில், குடிக்கு அடிமையான சீனிவாசன் நந்தினியின் கள்ளக்காதலன் குமரனிடம் மது வாங்கி கொடுக்கும் படி கேட்டுள்ளதாக தெரிகிறது. குமரன் மது வாங்கிக் கொண்டு வள்ளுவர் நகர் மேல் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு சீனிவாசனை வர வைத்து உடன் அவரது மனைவி நந்தினியை வர வைத்துள்ளார்.
பின்னர் சீனிவாசனுக்கு மது ஊற்றி கொடுத்து போதை தலைக்கு ஏறியதால் சீனிவாசனுக்கும் குமரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது நந்தினி மற்றும் கள்ளக்காதலன் குமரன் ஆகிய இருவரும் சேர்ந்து சீனிவாசனை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். இதனையடுத்து மனைவி நந்தினி மட்டும் கள்ளக்காதலன் குமரன் ஆகியோரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
சீரழியும் சமூகம் கள்ளக்காதல் விவகாரம் தலை தூக்கி தமிழகத்தை தடுமாற்றத்தில் கொண்டு செல்கிறது என்பதும் மறுக்கப்படாத உண்மையாக உள்ளது. மதுவிற்கு அடிமையாக இளம் தலைமுறை மாறுவது தமிழகத்திற்கு மிகப்பெரிய குற்றங்களை உருவாக்க வழி வகுக்கிறது.
இதையும் காண்க:
www.livecid.in Crime News Gallery
Tamil Crime
News Portal
www.livecid.com - India Trending News - India Crime News Portal - A company that tells the truth as it is.