திருவள்ளூரில் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து 5 ரவுடிகளை கைது செய்தனர்.
திருவள்ளூர் காந்திபுரத்தில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவின் படி தனிப்படை போலீசார் தொடர்ந்து கஞ்சா எப்படி வருகிறது யார் யாருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது அதில் யார் தொடர்பில் உள்ளார்கள் என்பதை குறித்து போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்திருந்தனர்.
இந்நிலையில் ஆந்திரா மாநிலம் விஜயவாடா பகுதியைச் சேர்ந்த மர்ம நபர் ஒருவர் ரயில் மூலமாக திருவள்ளூர் ரயில் நிலையம் பகுதிக்கு வந்து கஞ்சா விற்பனை செய்துவிட்டு செல்வதும்
அத்தகைய கஞ்சாவை திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி அருகே உள்ள காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ரவுடி பிராங்க்ளின் பெற்று தன் வீட்டில் பதுக்கி வைத்து திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதியில் விற்பனை செய்து வருவதும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக அனைவரையும் கையும் களவுமாக பிடிக்க போலீசார் திட்டம் வகுத்து கண்காணித்து வந்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று பிராங்கிளின் வீட்டிற்கு நுழைந்த தனிப்படை போலீசார் வீட்டில் சோதனை செய்ததில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து அவரை கைது செய்து அவர் யார் யாருக்கு விற்பனை செய்து வருகிறார் என்பதை குறித்து விசாரணை மேற்கொண்டதில் திருவள்ளுர் திருநின்றவூர் பகுதி சேர்ந்த அஜித் என்ற லிப்பு (22) படியநல்லூர் பகுதியைச் சேர்ந்த அஜித் 24,பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் 23, அய்யப்பக்கம் பகுதியைச் சேர்ந்த கோகுல் 19 ,ஆகிய 5 பேரையும் கைது செய்து திருவள்ளுர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் ஐந்து பேரையும் திருவள்ளுர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதில் முதல் குற்றவாளி பிராங்க்ளின் மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்ததாக கூறி திமுக கவுன்சிலர் இந்திரா பரசுராமன் மகனான கலைவாணனை சரமாரியாக வெட்டி கொலை முயற்சி வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.
Special Reporter:Ezumalai
www.livecid.in Crime News Gallery
Tamil Crime News Portal
www.livecid.com - India Trending News - India Crime News Portal - A company that tells the truth as it is.