திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூனாம்பாளையம் ஊராட்சியில் நடக்கும் சுகாதார சீர்கேடு.
பூனாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான மண்ணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வடக்கு புறமுள்ள ஆதிதிராவிடர் விடுதியின் அருகில் பல நாட்களாக பல மாதங்களாக குப்பைக் கழிவுகள் தேங்கிய நிலையில் யாரும் அகற்ற முடியாமல் மிகவும் துர்நாற்றத்துடன் குப்பைகள் சேர்ந்து உள்ளது.
இங்கு குப்பைகளை உள்ளதற்கு கிராம ஊராட்சி சரியான முறையில் பணிகளை செய்யாததே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த குப்பைகள் இருக்கும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த குப்பைகளை ஊராட்சி ஒன்றிய அலுவலர் கண்டும் காணாமல் குப்பைகளை கடந்து செல்கிறார்.
இனியாவது இந்த குப்பைகளை
பூனம்பாளையம் கிராம ஊராட்சி அலுவலர்கள் சரி செய்வார்களா என பொதுமக்கள் மிகவும் எதிர்பார்க்கின்றார்கள்.
அலட்சியத்துடன் செயல்படும் BDO அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்யாத அரசு ஊழியர்களை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.